மேலும் செய்திகள்
மணல் கடத்திய இருவர் கைது
04-Feb-2025
குளித்தலை: குளித்தலை அடுத்த, தரகம்பட்டி - கரூர் நெடுஞ்சாலை குருணி குளத்துப்பட்டி பிரிவு சாலையில், நேற்று முன்தினம் காலை சிந்தாமணிப்பட்டி போலீசார் வாகன சோதனை செய்தனர். அப்போது வேகமாக வந்த, டிராக்டர் டிப்பர் வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் அரசு அனுமதியில்லாமல், இரண்டு யூனிட் காட்டு செம்மண் கடத்தியது தெரியவந்தது. இதையடுத்து வாகனத்தை சிந்தாமணிப்பட்டி போலீசார் பறிமுதல் செய்து, கடவூர் சாலிக்கரைப்பட்டியை சேர்ந்த டிரைவர் மதியழகனை கைது செய்தனர்.
04-Feb-2025