உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / குளித்தலையில் சிலிண்டர் வெடித்து இரு வீடுகள் தீப்பற்றி எரிந்து நாசம்

குளித்தலையில் சிலிண்டர் வெடித்து இரு வீடுகள் தீப்பற்றி எரிந்து நாசம்

குளித்தலை, குளித்தலையில், சமையல் சிலிண்டர் வெடித்து இரண்டு வீட்டின் கூரைகள் எரிந்து, லட்சக்கணக்கான ரூபாய் மதிப்பிலான மின்சாதன பொருட்கள் கருகின.கரூர் மாவட்டம், குளித்தலை, பள்ளிவாசல் தெருவை சேர்ந்தவர்கள் ஜெகதாம்பாள், 82, அகிலா, 63. இருவருக்கும் சொந்தமாக தனித்தனியான வீடு உள்ளது. இருவரும் நேற்று மதியம், 1:45 மணியளவில் பள்ளிவாசல் அருகில் அமர்ந்திருந்தனர். அப்போது, ஜெகதாம்பாள் வீட்டின் அருகே முள்செடியில் தீப்பற்றி எரிந்து, அந்த தீ ஜெகதாம்பாள் வீட்டின் கூரையில் பட்டது. இதில் வீட்டில் இருந்த சமையல் சிலிண்டர் வெடித்தது.இதனால், அருகில் உள்ள அகிலா வீடும் தீப்பற்றி எரிந்தது. அருகில் இருந்தவர்கள் அணைக்க முயற்சி செய்தனர். அதிகளவு காற்று வீசியதில் தீப்பற்றி எரிந்தது. முசிறி தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். தீ விபத்தில் ஜெகதாம்பாள் வீடு, அகிலா வீடு இரண்டும் முற்றிலும் எரிந்து சேதமானது. இரு வீட்டில் இருந்த மின்சாதன பொருட்களான 'டிவி', பிரிட்ஜ், மிக்ஸி, பேன், கட்டில், மெத்தை, டேபிள் மற்றும் துணிமணிகள், பாத்திரங்கள், இருசக்கர வாகனங்கள் என, 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமாயின. தீப்பொறி காற்றில் பறந்து அருகாமையில் இருந்த லட்சுமி, மாரியாயி கூரை வீடுகளிலும் தீ பரவி லேசான சேதம் ஏற்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த எம்.எல்.ஏ., மாணிக்கம், இரு வீட்டினருக்கு ஆறுதல் கூறினார்.தீ விபத்து குறித்து குளித்தலை போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை