உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / காங்.,ஆர்ப்பாட்டத்துக்கு நோட்டீஸ் வினியோகம் செய்த இருவர் கைது

காங்.,ஆர்ப்பாட்டத்துக்கு நோட்டீஸ் வினியோகம் செய்த இருவர் கைது

குளித்தலை, அக். 20-குளித்தலை, காவிரி நகரை சேர்ந்த வட்டார காங்கிரஸ் தலைவர் ஆறுமுகம், 60, காங்., பிரமுகர் பாலசுப்பிரமணியன், 59, ஆகியோர், நேற்று முன்தினம் காலை குளித்தலை அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையின் முறைகேடுகளை கண்டித்தும், தலைமை மருத்துவர் பூமிநாதனை கண்டித்தும், காங்., சார்பில் வரும், 28 காலை 10:00 மணிக்கு நடைபெற உள்ள ஆர்ப்பாட்டத்துக்கு உரிய துண்டு பிரசுரங்களை தயார் செய்தனர். அதை அரசு மருத்துவமனைக்கு சென்று மருத்துவர்கள், நோயாளிகளுக்கு கொடுத்து, இடையூறு ஏற்படுத்தும் வகையில் வினியோகம் செய்தனர்.தகவல் அறிந்த குளித்தலை இன்ஸ்பெக்டர் உதயகுமார், இருவர் மீதும் வழக்கு பதிந்து கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை