லஞ்சம் பெற்ற துப்புரவு ஆய்வாளருக்குஇரண்டு ஆண்டு சிறை தண்டனை
கரூர்:லஞ்சம் பெற்ற நகராட்சி துப்புரவு ஆய்வாளருக்கு, இரண்டு ஆண்டு சிறை தண்டனை விதித்து, கரூர் தலைமை குற்றவியல் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.கரூர் நகராட்சி அலுவலகத்தில் துப்புரவு ஆய்வாளராக செல்வராஜ், 48, என்பவர் பணியாற்றினார். இவர் கடந்த, 2014ம் ஆண்டு கரூர் தான்தோன்றிமலையில், ரமேஷ்குமார் என்பவர் நடத்தி வரும் உணவகத்திற்கு உரிமம் வழங்க வேண்டி, 3,000 ரூபாய்- லஞ்சம் கேட்டார். அவர், லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார். இதையடுத்து, துப்புரவு ஆய்வாளர் செல்வராஜ் லஞ்சம் பெற்ற போது கையும் களவுமாக பிடிக்கப்பட்டு கைது செய்யப்பட்டார்.இது தொடர்பாக வழக்கு, கரூர் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்தது. நீதிபதி ஜெயபிரகாஷ் வழக்கை விசாரித்து, செல்வராஜூக்கு, இரண்டு ஆண்டு சிறை தண்டனை, 20 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தார்.