கரூர் ரங்கநாத சுவாமி கோவிலில் வைகுண்ட ஏகாதசி தொடக்கம்
கரூர்: கரூர், அபயபிரதான ரங்கநாத சுவாமி கோவிலில், வைகுண்ட ஏகாதசி விழாவை-யொட்டி, திருமொழித் திருநாள் எனப்படும் பகல் பத்து உற்சவம் நேற்று தொடங்கியது.பகல் பத்து உற்சவத்தில், முதல் நாளாக சுவா-மிக்கு பல்வேறு பொருட்களால் சிறப்பு அபி-ஷேகம் நடந்தது. தொடர்ச்சியாக அச்ச அவதார அலங்காரத்தில் சுவாமி காட்சியளித்தார். கோவில் உள்ளே சுவாமி புறப்பாடு நடந்தது. வரும், 29ல், மோகினியார் அலங்காரம், நாச்சியார் திருக்கோலம் நடக்கிறது. 30 அதிகாலை 4:00 மணிக்கு மேல் 4:30 மணிக்குள் வைகுண்ட ஏகாதசி சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடக்கிறது. 31ல், வைகுண்ட நாராயணன் அவதார அலங்காரம் நடக்கிறது.ஜன.,1ல், வெண்ணைத்தாழி கிருஷ்ணன் அலங்-காரம், 2ல் ராமாவதாரம், 3ல் வேணுகோபால கிருஷ்ணன் அலங்காரம், 4ல் வாமண அவதார அலங்காரம், 5ல், ராஜதர்பார் அலங்காரம் நடக்கி-றது. 6ம் தேதி குதிரை வாகனம், 7ல் ஆண்டாள் திருக்கோலம் அலங்காரம், வரும், 8 ல் ராப்பத்து, 10ம் நாளில் ஆழ்வார் மோட்சம் அலங்காரம், 9ல் ஊஞ்சல் உற்சவம் ஆகிய நிகழ்ச்சிகள் நடக்கின்-றன. ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்-துள்ளனர்.