உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / வேணுகோபால சுவாமிக்கு திருக்கல்யாணம்

வேணுகோபால சுவாமிக்கு திருக்கல்யாணம்

நாமகிரிப்பேட்டை: நாமகிரிப்பேட்டையில், ருக்மணி சத்யபாமா சமேத வேணுகோபால சுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் திருக்கல்யாண ரதோற்சவ விழா ஆண்டுதோறும் நடக்கும். இந்தாண்டுக்கான விழா, நேற்று முன்தினம் யாக சாலை பூஜையுடன் தொடங்கியது. நேற்று காலை, கொடியேற்றம் நடந்தது. அதை தொடர்ந்து, காலை, 10:00 மணிக்கு, சுவாமிக்கு திருக்கல்யாண உற்சவம் நடந்தது. இதில், சுவாமிக்கு பக்தர்கள் சீர்வரிசை கொண்டு வந்திருந்தனர்.தொடர்ந்து ருக்மணி, சத்யபாமா சுவாமிகளை ஆராதனையுடன் துாக்கி வந்தனர். பின், மங்கள இசை முழங்க திருக்கல்யாண நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து பக்தர்கள் சுவாமிக்கு மொய் எழுதி சென்றனர். கலந்து கொண்டவர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இரவு, 7:00 மணிக்கு பாரிவேட்டை குதிரை வாகன ஊர்வலம் நடந்தது. இன்று மதியம், ருக்மணி சத்யபாமா சமேத வேணுகோபால சுவாமி திருத்தேரோட்டம் தொடங்குகிறது. நாளை இரவு, சத்தாபரணம் நடக்கிறது. அப்போது மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட புஷ்ப பல்லக்கில் சுவாமி ஊர்வலம் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை