உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / கரூர் தாலுகா அலுவலகத்தில் காத்திருப்போர் அறை திறப்பு

கரூர் தாலுகா அலுவலகத்தில் காத்திருப்போர் அறை திறப்பு

கரூர்:கரூர் தாலுகா அலுவலகத்தில், பொதுமக்கள் காத்திருப்பு அறை திறக்கப்பட்டது.கரூர் தாலுகா அலுவலக வளாகத்தில், கிளை சிறை, இ-சேவை மையம், வட்ட வழங்கல் அலுவலகம், தீயணைப்பு நிலையம் உள்ளிட்ட, பல்வேறு அரசு துறை அலுவலகங்கள் உள்ளன. இதனால், பொதுமக்கள் வசதிக்காக கரூர் தாலுகா அலுவலக வளாகத்தில், காத்திருப்பு அறை கட்டப்பட்டுள்ளது. நாள்தோறும் தாலுகா அலுவலகத்துக்கு பல்வேறு பணிக்காக, பொதுமக்கள் வருகின்றனர்.ஆனால், காத்திருப்பு அறை பூட்டப்பட்டிருந்ததால், பொதுமக்கள் திறந்த வெளியில், கொளுத்தும், கோடை வெயிலில் தரையில் உட்காரும் அவல நிலை இருந்தது. மேலும், பலர் நீண்ட நேரம் தரையில் உட்கார முடியாமல் அருகில் உள்ள, கடைகளில் தஞ்சம் புகுந்தனர். இதுகுறித்து, நமது நாளிதழில் செய்தி வெளியானது. இதையடுத்து, கரூர் தாலுகா அலுவலகத்தில், பொதுமக்கள் அமரும் வகையில் காத்திருப்போர் அறை திறக்கப்பட்டது. இதனால், பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ