உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / மாயனுார் கதவணைக்கு தண்ணீர் வரத்து அதிகரிப்பு

மாயனுார் கதவணைக்கு தண்ணீர் வரத்து அதிகரிப்பு

கரூர், மாயனுார் கதவணைக்கு, நேற்று தண்ணீர் வரத்து அதிகரித்தது.கரூர் அருகே மாயனுார் கதவணைக்கு, நேற்று முன்தினம் காலை வினாடிக்கு, 20 ஆயிரத்து, 160 கன அடி தண்ணீர் வந்தது. நேற்று காலை, 8:00 மணி நிலவரப்படி தண்ணீர் வரத்து வினாடிக்கு, 26 ஆயிரத்து, 704 கன அடியாக அதிகரித்தது. அதில், டெல்டா மாவட்டங்களில், சம்பா சாகுபடிக்காக காவிரியாற்றில், 25 ஆயிரத்து, 234 கன அடி தண்ணீரும், நான்கு பாசன வாய்க்காலில், 1,470 கன அடி தண்ணீரும் திறக்கப்பட்டது.* க.பரமத்தி அருகே, கார்வாழி ஆத்துப்பாளையம் அணைக்கு, நேற்று காலை, 8:00 மணி நிலவரப்படி தண்ணீர் வரத்து இல்லை. 26.90 அடி உயரம் கொண்ட அணையின் நீர்மட்டம், 10.40 அடியாக இருந்தது. நொய்யல் பாசன வாய்க்காலில், தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ