உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / ரூ.67.46 லட்சத்தில் நலத்திட்ட உதவி

ரூ.67.46 லட்சத்தில் நலத்திட்ட உதவி

கரூர்:அரவக்குறிச்சி அருகே, ஈசநத்தத்தில் மக்கள் சந்திப்பு முகாம் நடந்தது. கலெக்டர் தங்கவேல் தலைமை வகித்தார். பின், அவர் கூறியதாவது:கரூர் மாவட்டத்திலுள்ள, 746 அரசு தொடக்கப் பள்ளிகளில் முதல்வர் காலை உணவுத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம், 30,254 மாணவ, மாணவியர் பயன் பெற்றுள்ளனர். பள்ளிக்கல்வி துறை மூலம், கல்வி இடைநிற்றலை தடுக்க தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குழந்தைகள் கல்வி கற்பதனால், சமூக வளர்ச்சி மேம்பாடு அடைவதுடன், தனி மனித பொருளாதார வளர்ச்சியும் அடைய முடியும். ஒவ்வொரு பெற்றோரும் இதை உணர்ந்து, தங்களது குழந்தைகளை குறைந்தபட்சம் உயர்கல்வி வரை, முழுமையாக படிக்க வைப்பதை உறுதி செய்திட வேண்டும். இவ்வாறு கூறினார்.பின், வருவாய்த்துறை சார்பில், 32 பேருக்கு, 12.80 லட்சம் ரூபாய் மதிப்பில் இலவச வீட்டு மனை பட்டா, ஒன்பது பேருக்கு பட்டா மாறுதல் ஆணை, 10 பேருக்கு வாரிசு சான்று, வேளாண் பொறியியல் துறை சார்பில், ஒரு பயனாளிக்கு, 2.78 லட்சம் மதிப்பில் சூரிய சக்தியால் இயங்கும் பம்பு செட் உள்பட மொத்தம், 92 பயனாளிகளுக்கு, 67.46 லட்சம் மதிப்பீட்டில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் தங்கவேல் வழங்கினார்.சப்-கலெக்டர் (சமூகபாதுகாப்பு திட்டம்) பிரகாசம், மாவட்ட வழங்கல் அலுவலர் சுரேஷ், கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் கந்தராஜா, வேளாண் துறை இணை இயக்குனர் சிவானந்தம், கால்நடை பராமரிப்புத்துறை இணை இயக்குனர் சாந்தி, உதவி ஆணையர் (கலால்) கருணாகரன் உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ