உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மாவட்டத்தில் பரவலாக மழை

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மாவட்டத்தில் பரவலாக மழை

கரூர், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, கரூர் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்துள்ளது.தெற்கு ஒடிசா,- வடக்கு ஆந்திர கடலோர பகுதிகளின் மேல் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியும், தென்னிந்திய பகுதிகளில் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. இதன் காரணமாக வட தமிழகத்தில் அநேக இடங்களிலும், தென்தமிழகத்தில் ஒருசில இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இந்நிலையில் நேற்று முன்தினம், நேற்றும், கரூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது. மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் அதாவது நேற்று காலை, 8:00 மணி வரை பெய்த மழை அளவு விபரம்: கரூர் 13.60 மி.மீ., அரவக்குறிச்சி, 5, அணைபாளையம், 4.20, க.பரமத்தி, 21, குளித்தலை, 23.60, கிருஷ்ணராயபுரம். 24.50, மாயனுார், 17, பஞ்சப்பட்டி, 116, கடவூர், 22, பாலவிடுதி, 50, மைலம்பட்டி, 20 மி.மீ., என மொத்தம், 326.50 மி.மீ., மழை பெய்துள்ளது. மாவட்டத்தில் சராசரி மழை அளவு, 27.21 மி.மீ.,


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை