உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / டூவீலர் மோதிய விபத்தில் கணவர் கண் முன் மனைவி பலி

டூவீலர் மோதிய விபத்தில் கணவர் கண் முன் மனைவி பலி

கரூர், வேலாயுதம்பாளையம் அருகே, மொபட் மீது அடையாளம் தெரியாத மற்றொரு டூவீலர் மோதியதில் மனைவி உயிரிழந்தார். கணவருக்கு படுகாயம் ஏற்பட்டது.மக்கல் மாவட்டம், பரமத்தி வேலுாரை சேர்ந்தவர் குப்புசாமி, 64; இவர் கடந்த, 29ம் தேதி கரூர்-சேலம் தேசிய நெடுஞ்சாலை தளவாப்பாளையம் பகுதியில், டி.வி.எஸ்., வேகா மொபட்டில், மனைவி தமிழரசி, 54, என்பவருடன் சென்று கொண்டிருந்தார். அப்போது, அடையாளம் தெரியாத நபர் ஓட்டி சென்ற மற்றொரு டூவீலர், குப்புசாமி சென்ற மொபட் மீது மோதியது. இதில், மொபட்டில் இருந்து துாக்கி வீசப்பட்ட தமிழரசி கீழே விழுந்து உயிரிழந்தார். குப்புசாமிக்கு படுகாயம் ஏற்பட்டு, கரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். வேலாயுதம்பாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ