மனைவி மாயம்: கணவன் புகார்
கரூர்;கரூர் மாவட்டம், கந்தம்பாளையம் அண்ணா நகரை சேர்ந்தவர் குணசேகரன், 48; புகழூர் காகித ஆலையில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி அனிதா, 34; ஜவுளி கடையில் வேலை செய்து வருகிறார். நேற்று முன்தினம், குணசேகரனுக்கும், அனிதாவுக்கும் சினிமா சென்றது தொடர்பாக தகராறு ஏற்பட்டது. இதனால், கோபித்துக்கொண்ட அனிதா, அருகில் உள்ள தாய் வீட்டுக்கு சென்றுள்ளார். பின் அனிதாவை காணவில்லை.உறவினர்களின் வீடுகளுக்கும் அனிதா செல்லவில்லை. இதனால், அதிர்ச்சியடைந்த குணசேகரன் போலீசில் புகார் செய்தார். வேலாயுதம்பாளையம் போலீசார், மாயமான அனிதாவை தேடி வருகின்றனர்.