மேலும் செய்திகள்
போலீஸ்காரருக்கு '10 ஆண்டு'
04-Sep-2026
குளித்தலை:குளித்தலை அடுத்த வீரணம்பட்டி பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன், 29; கொத்தனார். அதே பகுதியைச் சேர்ந்த பிரியங்கா, 28, என்பவரை, கடந்த, 10 ஆண்டுகளுக்கு முன் காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு மவுலிகா, 9, முகிலன், 4, என, இரண்டு குழந்தைகள் உள்ளனர். மனைவி பிரியங்கா, கரூர் டெக்ஸில் வேலைக்கு சென்று வந்தார். இந்நிலையில், தம்பதியர் இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதனால், கடந்த, 25 காலை, 10:00 மணியில் இருந்து மனைவி பிரியங்காவை காணவில்லை. பல்வேறு இடங்களில் தேடியும், விசாரித்தும், எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதுகுறித்து மணிகண்டனர் அளித்த புகார்படி, சிந்தாமணிப்பட்டி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
04-Sep-2026