உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / குடிநீர் தொட்டி சீரமைக்கும் பணியில் தொழிலாளர்கள்

குடிநீர் தொட்டி சீரமைக்கும் பணியில் தொழிலாளர்கள்

கிருஷ்ணராயபுரம்: வயலுார் பஞ்சாயத்து சரவணபுரம் பகுதியில் உள்ள குடிநீர் தொட்டி பராமரிப்பு பணிகள் துவங்கப்பட்டது.கிருஷ்ணராயபுரம் அடுத்த வயலுார் பஞ்சாயத்துக்கு உட்பட்ட சரவணபுரம் சாலை முடக்கு பகுதியில், குடிநீர் தொட்டி அமைக்-கப்பட்டுள்ளது. இதிலிருந்து வீடுகளுக்கு குடிநீர் வழங்கப்படுகி-றது. குடிநீர் தொட்டியின் துாண்களில் விரிசல் ஏற்பட்டு, பலவீன-மாக இருந்தது.இந்நிலையில், தொட்டியை பராமரிக்க பஞ்சாயத்து நிர்வாகம் சார்பில் பணிகள் துவங்கப்பட்டது. இதில் தொட்டியை சுற்றி வளர்ந்த செடிகள் அகற்றப்பட்டன.மேலும் விரிசல் அடைந்த துாண் பகுதியில் குழிகள் பறிக்கப்-பட்டு ஆழப்படுத்தும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ