உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / உலக சுற்றுச்சூழல் சிறப்பு கூட்டம்

உலக சுற்றுச்சூழல் சிறப்பு கூட்டம்

கிருஷ்ணராயபுரம்:கிருஷ்ணராயபுரம் டவுன் பஞ்சாயத்து வளாகத்தில் சிறப்பு கூட்டம் நேற்று நடந்தது.டவுன் பஞ்சாயத்து தலைவர் சேதுமணி தலைமை வகித்தார். இதில், உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, திடக்கழிவு மேலாண்மை விதிகள்-2026ன் படி நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் திடக்கழிவு மேலாண்மை பணிகளை திறம்பட செய்வதற்கும், தரம் பிரித்தல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும், உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு வரும் 12 வரை விழிப்புணர்வு செய்தல், ஆகிய பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டது. டவுன் பஞ்சாயத்து துணைத் தலைவர் வளர்மதி, செயல் அலுவலர் வெங்கடேசன், வார்டு கவுன்சிலர்கள், டவுன் பஞ்சாயத்து அலுவலக பணியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி