உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / டி.என்.பி.எல்.,ஆலையில் உலக ஓசோன் தின உறுதிமொழி ஏற்பு

டி.என்.பி.எல்.,ஆலையில் உலக ஓசோன் தின உறுதிமொழி ஏற்பு

கரூர் :கரூர் அருகில் உள்ள, புகழூர் தமிழ்நாடு செய்திதாள் உற்பத்தி நிறுவனம் சார்பில், உலக ஓசோன் தின உறுதிமொழியேற்பு நிகழ்ச்சி நடந்தது. முதன்மை பொதுமேலாளர் (இயக்கம்) ராஜலிங்கம் தலைமை வகித்தார். ஆண்டுதோறும் உலக ஓசோன் தினம் செப்.,16-ல் கடைப்பிடிக்கப்படுகிறது. காகித நிறுவன பணியாளர்கள் கலந்து கொண்டு, ஓசோன் தின விழிப்புணர்வு உறுதிமொழியை ஏற்றனர். பின், ஓசோன் தின விழிப்புணர்வு பதாகைகள் ஆலை முன் வைக்கப்பட்டன. நிகழ்ச்சியில், உதவி பொது மேலாளர் (பாதுகாப்பு) சபாபதி, முதன்மை மேலாளர் (சுற்றுச்சூழல்) சுந்தரம் உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ