உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / நேற்று ஆயுத பூஜை இன்று சரஸ்வதி பூஜை:கரூர் மார்க்கெட்டில் அலைமோதிய கூட்டம்

நேற்று ஆயுத பூஜை இன்று சரஸ்வதி பூஜை:கரூர் மார்க்கெட்டில் அலைமோதிய கூட்டம்

கரூர்:ஆயுத பூஜையையொட்டி, கரூரில் பூக்கள், பொரி, வாழைத்தார், பழங்கள் விற்பனை சூடுபிடித்தது. பூ மார்க்கெட், உழவர் சந்தை, காமராஜ் தினசரி மார்க்கெட்டில் நேற்று, பொது மக்கள் கூட்டம் அலைமோதியது.ஹிந்துக்களின் முக்கிய பண்டிகையான ஆயுத பூஜை நேற்று கொண்டாடப்பட்டது. இன்று சரஸ்வதி பூஜையும் கொண்டாடப்படுகிறது. இதற்காக, கரூர் அருகே பசுபதிபாளையம், சீனிவாசபுரம், கருப்பாயி கோவில் தெரு உள்ளிட்ட இடங்களில், பொரி தயாரிப்பு கடந்த, ஒரு வார காலமாக விறுவிறுப்பாக நடந்தது.ஒரு மூட்டை பொரி, 950 முதல், 1,100 ரூபாய் வரையிலும், நிலக்கடலை ஒரு கிலோ, 120 முதல், 140 ரூபாய் வரையிலும், பொட்டுக்கடலை, 100 முதல், 110 ரூபாய் வரை விற்றது. ஆப்பிள், கொய்யா, ஆரஞ்சு, சாத்துக்குடி சராசரியாக ஒரு கிலோ, 80 முதல், 120 ரூபாய் வரை விற்றது. பெரிய வாழை மரம் ஜோடி, 400 முதல், 600 ரூபாய் வரையிலும், சிறிய வாழை மரம், 50 ரூபாய் வரையிலும் விற்றது.கரூர் ரயில்வே ஸ்டேஷன் அருகில் உள்ள பூ மார்க்கெட்டில், மல்லிகை பூ ஒரு கிலோ, 1,200 ரூபாய் முதல், 1,500 ரூபாய் வரையிலும், முல்லை பூ, 600 முதல், 800 ரூபாய், ஜாதி பூ, 700 ரூபாய் முதல், 800 ரூபாய் வரையிலும், அரளி, 300 முதல், 500 ரூபாய் வரையிலும், கோழி கொண்டை, செண்டு மல்லி தலா, 100 ரூபாய், மரிக்கொழுந்து நான்கு கட்டு, 160 ரூபாய், தாமரை ஒன்று, 25 ரூபாய்க்கு விற்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி