உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / போலி தங்க காசு விற்பனை இளம் பெண் சுற்றிவளைப்பு

போலி தங்க காசு விற்பனை இளம் பெண் சுற்றிவளைப்பு

குளித்தலை:போலி தங்க காசுகளை விற்க முயன்ற சேலம் பெண்ணை போலீசார் கைது செய்தனர்.சேலம் மாவட்டம், நெய்க்காரப்பட்டியை சேர்ந்த கோவிந்தராஜ் மனைவி பூங்கொடி, 30. இவர், நேற்று முன்தினம் மாலை, கரூர் மாவட்டம், குளித்தலை பஜனைமடம் மற்றும் பஸ் ஸ்டாண்ட் பகுதிகளில் நின்று, தான் மிகவும் கஷ்டத்தில் இருப்பதாகவும், தன்னிடம் உள்ள தங்க காசுகளை விற்பனை செய்வதாகவும் கூறி, பொதுமக்களிடம் போலி தங்க காசுகளை விற்க முயன்றுள்ளார்.இதை கவனித்த, குளித்தலையை சேர்ந்த ஆனந்த் சந்தேகமடைந்து, அப்பகுதி பெண்கள் உதவியுடன் அவரை பிடித்து விசாரித்துள்ளார். அவர் ஏமாற்றும் நோக்கில் வந்தது தெரியவந்தது. குளித்தலை போலீசில் ஒப்படைத்தனர்.எஸ்.ஐ., சரவணகிரி நடத்திய விசாரணையில், அவர் போலி தங்க காசுகளை விற்க முயன்றது உறுதியானதால், இரண்டு பிரிவுகளில் வழக்குப்பதிந்து, 12 போலி தங்க காசுகளை பறிமுதல் செய்தனர். திருச்சி சிறையில் அவர் அடைக்கப்பட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ