மொபைல் போன், பணம் திருடிய வாலிபர் கைது
கரூர்: கரூரில், மொபைல் போன், பணம் திருடியதாக வாலிபரை போலீசார் கைது செய்தனர்.கரூர் அருகே ஆண்டாங்கோவில் மருத்துவ நகரை சேர்ந்தவர் கதிரேசன், 30; கரூர் பஸ் ஸ்டாண்டில் மொபைல் கடை நடத்தி வருகிறார். கடந்த, 11 இரவு மொபைல் கடையின் முன்பக்க கதவை உடைத்து, மூன்று மொபைல் போன், 1,200 ரூபாய் ஆகியவற்றை மர்ம நபர் திருடி சென்றுள்ளார். இதுகுறித்து, கதிரேசன் போலீசில் புகார் செய்தார். இதையடுத்து, மொபைல் போன் மற்றும் பணத்தை திருடியதாக நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டை சேர்ந்த சீனிவாசன், 35, என்பவரை, கரூர் டவுன் போலீசார் கைது செய்தனர்.