உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / தடுப்பு சுவரில் பைக் மோதி வாலிபர் பலி

தடுப்பு சுவரில் பைக் மோதி வாலிபர் பலி

கரூர், கரூர் அருகே, தடுப்பு சுவர் மீது பைக் மோதிய விபத்தில், வாலிபர் உயிரிழந்தார்.கரூர் மாவட்டம், மாயனுார் அருகே திருகாம்புலியூர் பகுதியை சேர்ந்தவர் லோகேஸ்வரன், 22; இவர், கரூரில் உள்ள பைக் ேஷா ரூமில் வேலை செய்து வந்தார். இந்நிலையில், நேற்று மாலை சர்வீஸ் செய்யப்பட்ட பைக்கை, பரிசோதனை செய்ய கரூர் அருகே திருமாநிலையூர் அரசு போக்குவரத்து பணிமனை சாலையில் ஓட்டி சென்றார். அப்போது, பைக் திடீரென நிலை தடுமாறி எதிரே இருந்த தடுப்பு சுவரில் மோதியது. அதில், கீழே விழுந்த லோகேஸ்வரன் தலையில் அடிபட்டு உயிரிழந்தார்.பசுபதிபாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !