உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / அரசு பள்ளி மைதானம், சி.இ.ஓ., ஆபீஸ் வளாகத்திற்குள் தேங்கும் கழிவுநீர்

அரசு பள்ளி மைதானம், சி.இ.ஓ., ஆபீஸ் வளாகத்திற்குள் தேங்கும் கழிவுநீர்

அரசு பள்ளி மைதானம், சி.இ.ஓ., ஆபீஸ் வளாகத்திற்குள் தேங்கும் கழிவுநீர்கிருஷ்ணகிரி:கிருஷ்ணகிரி நகரிலுள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், 1,000க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர். பள்ளியை ஒட்டி மைதானம் உள்ளது. அப் பகுதியில் மாவட்ட சி.இ.ஓ., அலுவலகம், அனைவருக்கும் கல்வி திட்ட அலுவலகம், டி.இ.ஓ., அலுவலகம், அரசு பள்ளி, கல்லுாரி மாணவியரின் விடுதி ஆகியவை உள்ளன.கிருஷ்ணகிரி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் இருந்து வெளியேறும் கழிவு நீர், அருகே, அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் தேங்கி வருகிறது. அரசு அலுவலகங்கள், மாணவியர் விடுதி, பள்ளி மைதானம் உள்ள பகுதியில், குட்டை போல கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசுவது குறித்து, நகராட்சிக்கு புகாரளித்தும் பயனில்லை. இதனால், மைதானத்தில் நடைபயிற்சி மேற்கொள்வோர், மாணவர்கள் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.கிருஷ்ணகிரி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் மகேந்திரன் கூறுகையில், ''பள்ளியின், 30 கழிவறைகள் உள்ள பகுதிக்கு பாதாள சாக்கடை இணைப்பு உள்ளது. ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானத்தை ஒட்டி கட்டப்பட்ட, 20 கழிவறைகள் மற்றும் கை கழுவும் பைப்கள் உள்ள பகுதிக்கு பாதாள சாக்கடை இணைப்பு இல்லை. தற்போது, பழைய கழிவறை பகுதிகளை புதுப்பிக்கும் பணி நடப்பதால், ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானத்தை ஒட்டிய பகுதி கழிப்பறை மற்றும் கை கழுவும் பைப்களில், அதிக மாணவியர் புழங்குகின்றனர். இதனால், 'சம்ப்' நிரம்பி நீர் வெளியேறுகிறது. ஒரு வாரத்தில் புதுப்பிக்கும் பணிகள் நிறைவடைந்தால் இப்பிரச்னை ஏற்படாது. தற்போது தேங்கியுள்ள கழிவுநீரை அகற்றவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்,'' என்றார்.கிருஷ்ணகிரி நகராட்சி கமிஷனர் கிருஷ்ணமூர்த்தி கூறுகையில், ''பள்ளி கழிவு நீர் மேலாண்மை குறித்து, அந்த நிர்வாகம் தான் முடிவு செய்ய வேண்டும். இது குறித்து விசாரித்து, பள்ளிக்கு அபராதம் விதிக்கப்படும்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை