உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / ஒகேனக்கல்லில் பயன்பாடின்றிபூட்டி கிடக்கும் உடைமாற்றும் அறை-வியூ பாயிண்ட்

ஒகேனக்கல்லில் பயன்பாடின்றிபூட்டி கிடக்கும் உடைமாற்றும் அறை-வியூ பாயிண்ட்

ஒகேனக்கல்லில் பயன்பாடின்றிபூட்டி கிடக்கும் உடைமாற்றும் அறை-'வியூ பாயிண்ட்' ஒகேனக்கல் : ஒகேனக்கல்லில், முடிவுற்ற பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை, முதல்வர் ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தும், அவை காட்சி பொருளாகவே உள்ளது, சுற்றுலா பயணிகளை ஏமாற்றம் அடைய செய்துள்ளது.தர்மபுரி மாவட்டத்தில், ஒகேனக்கல் சிறந்த சுற்றுலா தலமாக உள்ளது. இங்கு, விடுமுறை நாட்களில் உள்ளூர் மட்டுமின்றி வெளியூர், வெளி மாநிலங்களிலிருந்தும் ஏராளமானோர் வந்து செல்கின்றனர். அவர்களின் நலன் கருதி, 18.50 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஆண், பெண்களுக்கென தனித்தனி மசாஜ் அறைகள், உடை மாற்றும் அறை மற்றும் உணவகம், நடைப்பாதை, ஐந்து அருவியை கண்டு ரசிக்கும் உயர் மட்ட வியூ பாயின்ட், கழிவறைகள், கடைகள் உள்ளிட்ட பல்வேறு திட்டப்பணிகள் முடிக்கப்பட்டு, கடந்தாண்டு நவ., 27 ல், தமிழக முதல்வர் ஸ்டாலின், காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார். இதில் உணவகத்தை மட்டும், தமிழ்நாடு ஓட்டல் நடத்தி வரும் நிலையில், மற்ற அனைத்து திட்டங்களும், காட்சி பொருளாக மட்டுமே உள்ளன. சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், முடிவுற்ற திட்ட பணிகளை பூட்டியே வைத்துள்ளது, பெரும் ஏமாற்றத்தையே உண்டாக்கி உள்ளதாக, சுற்றுலாப்பயணிகள் தெரிவிக்கின்றனர்.ம.கவுதம், 25, சென்னை: ஒகேனக்கல்லில், பொதுவெளியில் துணி மாற்றவே சிரமமாக உள்ளது. இங்கு துணி மாற்றும் அறை புதியதாக கட்டியும், பூட்டியே கிடக்கிறது. அதிகளவில் சுற்றுலா பயணிகள் வந்து செல்லும் நிலையில், புதியதாக கட்டியுள்ள கழிவறைகளும் மூடியே உள்ளன.யு.சூர்யா, 28, பென்னாகரம்: நீண்ட நாட்களுக்கு பிறகு ஒகேனக்கல்லில் ஆண், பெண்களுக்கு மசாஜ் செய்ய தனித்தனி அறைகள் கட்டப்பட்டும், பயன்பாடிற்கு கொண்டு வரப்படவில்லை. இங்கு வாடகைக்கு கடைகள் கிடைப்பதே இல்லை. கட்டி முடிக்கப்பட்ட கடைகளை, அதிகாரிகள் உடனடியாக பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை