உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / கால்வாய், சிறுபாலம் இருந்தும் பயனில்லைபள்ளி வளாகம், வீடுகளுக்குள் தேங்கும் கழிவுநீர்

கால்வாய், சிறுபாலம் இருந்தும் பயனில்லைபள்ளி வளாகம், வீடுகளுக்குள் தேங்கும் கழிவுநீர்

கால்வாய், சிறுபாலம் இருந்தும் பயனில்லைபள்ளி வளாகம், வீடுகளுக்குள் தேங்கும் கழிவுநீர்கிருஷ்ணகிரி:கிருஷ்ணகிரி நகராட்சி, பழையபேட்டை, நேதாஜி சாலையில் ஏராளமான இறைச்சி கடைகள், மீன் சந்தை மற்றும் கடைகள், குடியிருப்புகள், அரசு நடுநிலைப்பள்ளி உள்ளது. பழையபேட்டையில் இருந்து அரசு நடுநிலைப்பள்ளி, நேதாஜி சாலை வழியாக காட்டிநாயனப்பள்ளி முருகன் சாலைக்கு கழிவுநீர் செல்ல வேண்டும். இதற்காக கழிவுநீர் கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது. மீன் சந்தை அருகில் சாலையின் ஒரு புறத்திலிருந்து மற்றொரு புறத்திற்கு சாக்கடை கால்வாய் செல்லும் வகையில் சாலை குறுக்கே பைப் பதிக்கப்பட்டது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன், இந்த சாக்கடை கால்வாய் அமைக்கப்பட்டதில் இருந்தே, கழிவுநீர் வெளியேறுவதில்லை என, அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.கழிவுநீர் கால்வாய், தாழ்வான பகுதியிலிருந்து மேட்டுப்பகுதிக்கு செல்லும் வகையில் அமைக்கப்பட்டதாலும், அதில், இறைச்சி கடைகளின் கழிவுகள் செல்வதாலும், கால்வாய்களில் அடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் உள்ள நடுநிலைப்பள்ளியின் சுற்றுச்சுவர் ஓரம் முதல், நேதாஜி சாலை வரை, கழிவு நீர் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. மேலும் அருகிலுள்ள வீடுகளில் ஆண்டுக்கணக்கில் கழிவுநீர் தேங்கி, கொசு உற்பத்தியும் அதிகமாகி உள்ளது எனவும், இங்குள்ள வீடுகளுக்கு, பாதாள சாக்கடை இணைப்புக்கு பணம் கட்டியும் இணைப்பும் கொடுக்கவில்லை. இது குறித்து நகராட்சிக்கு பல முறை மனு அளித்தும், புகாரளித்தும் கண்டுகொள்ளவில்லை. மாவட்ட நிர்வாகம் விசாரித்து, சாக்கடை கால்வாய்களில் கழிவுநீர் வெளியேற நடவடிக்கை எடுக்க, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை