உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / சாய ஆலை பிரச்னைக்கு முற்றுப்புள்ளிசெங்கோட்டையன் எம்.எல்.ஏ., பேச்சு

சாய ஆலை பிரச்னைக்கு முற்றுப்புள்ளிசெங்கோட்டையன் எம்.எல்.ஏ., பேச்சு

சாய ஆலை பிரச்னைக்கு முற்றுப்புள்ளிசெங்கோட்டையன் எம்.எல்.ஏ., பேச்சுகோபி:சட்டசபை கூட்டத்தில் கடந்த 7ம் தேதி நடந்த விவாதத்தில் கோபி தொகுதி அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., செங்கோட்டையன் பேசுகையில், 'கோபி தாலுகாவுக்கு உட்பட்ட பவானி ஆற்றின் அருகே சாயத்தொழிற்சாலை விரிவாக்கம் செய்தால், மிகப்பெரிய அளவில் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படும். எனவே பவானி ஆற்றில் சாயக்கழிவு நீர் கலக்காமல் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என தெரிவித்தார். அதற்கு பதில் அளித்த சுற்றுச்சூழல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, 'அதற்காக தொழில்நுட்பக்குழு அமைத்து, விரிவான ஆய்வு நடத்தி, அதன் அறிக்கை, பரிந்துரை அடிப்படையில், இறுதி முடிவு எடுக்கப்படும்' என கூறினார். பவானி ஆறு பாதுகாப்புக்கு, சட்டசபையில் குரல் கொடுத்த எம்.எல்.ஏ., செங்கோட்டையனை சந்திக்க, கொடிவேரி அணை பாசன விவசாயிகள் நுாற்றுக்கும் மேற்பட்டோர், கோபி அருகே குள்ளம்பாளையத்தில் உள்ள அவரது வீட்டில் நேற்று காலை குவிந்தனர். சங்க நிர்வாகிகள் அவருக்கு சால்வை அணிவித்து, நன்றி தெரிவித்தனர். அப்போது செங்கோட்டையன் பேசியதாவது: அனைவரின் முயற்சியால், இப்பிரச்னை வெற்றி பெற்றுள்ளது. விவசாயிகளே முதல்வரை சந்தித்து பேசியுள்ளனர். பாசனத்துக்கான தண்ணீரில் மாசு என்ற பாதிப்பு இனி இருக்காது. ஏனெனில் திருப்பூர் சாயப்பட்டறைகளால், ஏற்கனவே காங்கேயம் வரையான பகுதி பாதித்துள்ளது. இனி எந்த காலத்திலும், பவானி ஆற்றங்கரை ஓரத்தில் சாய தொழிற்சாலை வராது. தவிர, பவானி ஆற்றில் சாக்கடை நீர் கலப்பதையும் தடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். சாய தொழிற்சாலை பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.அப்போது நிருபர்கள், 'டில்லியில் மத்திய அமைச்சர்களை சந்தித்ததற்கான காரணம் என்ன? உங்களுக்கு ஆதரவாக, அ.தி.மு.க., பொது செயலர் என மதுரையில் போஸ்டர் ஒட்டியதற்கு என்ன நினைக்கீறீர்கள்?' என கேட்டதற்கு, கும்பிடு போட்டபடியே வீட்டுக்குள் சென்று விட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை