உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / நஞ்சுண்டேஷ்வரர் கோவிலில்வருஷாபிஷேகம்

நஞ்சுண்டேஷ்வரர் கோவிலில்வருஷாபிஷேகம்

நஞ்சுண்டேஷ்வரர் கோவிலில்வருஷாபிஷேகம்தர்மபுரி:தர்மபுரி அடுத்த, ஆத்துமேடு பகுதியில், சர்வாங்க சுந்தரி சமேத நஞ்சுண்டேஷ்வரர் ஆலயத்தில், வருடாபிஷேக விழா மற்றும் தை மாத பவுர்ணமியை முன்னிட்டு, நேற்று சிறப்பு பூஜை நடந்தது. முன்னதாக, கணபதி ஹோமம் நடந்தது. தொடர்ந்து, பல விதமான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடந்தது.தொடர்ந்து, யாகசாலையில் வைக்கப்பட்டிருந்த கலச நீர் மூலவருக்கு தெளித்து, மஹா அபிஷேகம் நடந்தது. இதில், மூலவருக்கு வண்ண மலர்களாலான மாலைகள் சாற்றப்பட்டு, மஹா தீபாராதனையை தொடர்ந்து, சிறப்பு அலங்காரத்தில் நஞ்சுண்டேஷ்வரர் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை