உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / பள்ளிக்கு சென்ற பெண்குழந்தையுடன் மாயம்

பள்ளிக்கு சென்ற பெண்குழந்தையுடன் மாயம்

பள்ளிக்கு சென்ற பெண்குழந்தையுடன் மாயம்கிருஷ்ணகிரி, :கிருஷ்ணகிரி அடுத்த கருத்தமாரம்பட்டியை சேர்ந்தவர் ராமசாமி, 32. இவரது மனைவி அர்ச்சனா, 23. இவர்களுக்கு திருமணமாகி, 5 வயதில் பெண் குழந்தை உள்ளது. கடந்த, 8ல், மகள் படிக்கும் பள்ளி ஆண்டு விழாவிற்கு இருவரும் சென்றனர். அப்போது குளிர்பானம் வாங்கி வருவதாக கூறி சென்ற அர்ச்சனா மாயமானார். அவரை எங்கு தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து அவரது கணவர் ராமசாமி கே.ஆர்.பி., டேம் போலீசில் நேற்று முன்தினம் புகார் அளித்தார். அதில், கருக்கப்பள்ளத்தை சேர்ந்த பச்சையப்பன், 24, என்ற வாலிபர் மீது சந்தேகம் இருப்பதாக தெரிவித்துள்ளார். போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி