உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / சத்ரபதி சிவாஜி ஜெயந்தி விழா

சத்ரபதி சிவாஜி ஜெயந்தி விழா

சத்ரபதி சிவாஜி ஜெயந்தி விழாஓசூர்:ஓசூர், காமராஜ் காலனியில் ஹிந்து ஜன சேனா மற்றும் சிவசேனா அமைப்புகள் சார்பில், சத்ரபதி சிவாஜியின், 395வது ஜெயந்தி விழா பொதுக்கூட்டம் நடந்தது. முன்னதாக சத்ரபதி சிவாஜி சிலை வைக்கப்பட்டிருந்த வாகனத்தை, யுவ சேனா அமைப்பின் மாநில செயலாளர் சிவகுமார், முதுகில் அலகு குத்தி இழுத்து வந்தார். தொடர்ந்து மேடையில் சத்ரபதி சிவாஜியின் சிலை வைக்கப்பட்டு அவரை போற்றும் வகையில், அனைவரும் மலர்களால் அபிஷேகம் செய்தனர். தொடர்ந்து நடந்த ஹிந்து எழுச்சி பொதுக்கூட்டத்தில், ஆர்.எஸ்.எஸ்., அமைப்பை சேர்ந்த பெங்களூரு ரங்கராஜன் ஐயா, ஹிந்து ஜனசேனா நிறுவன தலைவர் மற்றும் சிவசேனா மாநில அமைப்பு செயலாளர் முரளி மோகன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !