உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / பா.ஜ., சார்பில் கையெழுத்து இயக்கம்

பா.ஜ., சார்பில் கையெழுத்து இயக்கம்

பா.ஜ., சார்பில் கையெழுத்து இயக்கம்கெலமங்கலம்:தமிழக பா.ஜ., கட்சி சார்பில் மும்மொழி கல்வி கொள்கைக்கு ஆதரவாக மக்களிடம் கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட பா.ஜ., கட்சி சார்பில், கெலமங்கலத்தில் நேற்று கையெழுத்து இயக்கம் துவக்க விழா நடந்தது. மேற்கு மாவட்ட தலைவர் நாராயணன் தலைமை வகித்தார். முன்னாள் தலைவர் நாகராஜ் முன்னிலை வகித்தார். மும்மொழி கல்வி கொள்கைக்கு ஆதரவாக, பா.ஜ., கட்சியினர் கையெழுத்திட்டனர். தொடர்ந்து, கெலமங்கலம் பஸ் ஸ்டாண்ட் உட்பட பல்வேறு இடங்களில், பொதுமக்களிடம் கையெழுத்து பெறப்பட்டது. முன்னாள் மாவட்ட தலைவர் முனிராஜ், முன்னாள் ஒன்றிய தலைவர் சந்துரு உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ