உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / அரசு மகளிர்கலைக்கல்லுாரியில் மகளிர் தினவிழா

அரசு மகளிர்கலைக்கல்லுாரியில் மகளிர் தினவிழா

அரசு மகளிர்கலைக்கல்லுாரியில் மகளிர் தினவிழாகிருஷ்ணகிரி:கிருஷ்ணகிரி அரசு மகளிர் கலைக்கல்லுாரியில் நேற்று மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது. கணிதத் துறை தலைவர் பேராசிரியர் உமா வரவேற்றார். கல்லுாரி முதல்வர் கீதா தலைமை வகித்தார். கிருஷ்ணகிரி நகராட்சி தலைவர் பரிதா நவாப் பேசினார். கிருஷ்ணகிரி அரசு மகளிர் கலைக் கல்லுாரியில் படித்து தற்போது பத்திரப்பதிவு, பள்ளி, சட்டம், போலீஸ் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பணிபுரியும் முன்னாள் மாணவியர்,பெண்களுக்கு கல்வியின் அவசியத்தையும், எதிர்காலத்தை கையாளும் முறைகள் குறித்தும் விளக்கி பேசினர். தொடர்ந்து மாணவியரின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. பேராசிரியர்கள் பரமகுரு, சீனிவாசன், முரளி, கனகலட்சுமி மற்றும், 2,000க்கும் மேற்பட்ட கல்லுாரி மாணவியர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை