மேலும் செய்திகள்
தண்டவாளத்தில் வீசப்பட்ட சூளகிரி தொழிலாளி உடல்
16-Mar-2025
சூளகிரி தொழிலாளி படுகொலைதண்டவாளத்தில் வீசப்பட்ட உடல்ஓசூர்:சூளகிரி வாலிபரை கொன்ற கும்பல், சடலத்தை ரயில்வே தண்டவாளத்தில் வீசி சென்றுள்ளது.கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே சின்னார் கிராமத்தை சேர்ந்தவர் ரகுபதி மகன் லோகநாதன், 24, கூலி தொழிலாளி. கடந்த மாதம், 19ம் தேதி மதியம் வீட்டிலிருந்து சென்றவர் திரும்பவில்லை. அவரது தாய் மணிமேகலை புகார் படி, சூளகிரி போலீசார் தேடி வந்தனர்.இந்நிலையில் கர்நாடகா மாநிலம் பெங்களூரு கன்டோன்மென்ட் ரயில்வே போலீசார், சில நாட்களுக்கு முன், ரயில்வே தண்டவாளத்தில், வாலிபர் ஒருவரின் சடலத்தை மீட்டு விசாரித்தனர். வாலிபரை கத்தியால் குத்தி கொன்று, தண்டவாளத்தில் வீசி சென்றது தெரிந்தது. விசாரணையில் லோகநாதன் என தெரிந்தது. இதுகுறித்து சூளகிரி ஸ்டேஷனுக்கு கர்நாடகா ரயில்வே போலீசார் வந்து விசாரித்தனர். இதில் கடந்த மாதம், 19ல் ஓசூர் பஸ் ஸ்டாண்டில் இருந்து, கர்நாடகா மாநிலத்திற்கு லோகநாதன் பஸ் ஏறி சென்றது தெரிந்தது. கர்நாடகாவில் மர்ம கும்பல் கொலை செய்து, சடலத்தை தண்டவாளத்தில் வீசி சென்றிருக்கலாம் என, போலீசார் தரப்பில் கூறப்படுகிறது. இதுகுறித்து சூளகிரி மற்றும் பெங்களூரு கன்டோன்மென்ட் ரயில்வே போலீசார் தனித்தனியாக விசாரிக்கின்றனர்.
16-Mar-2025