மேலும் செய்திகள்
3 கட்ட போராட்டம்: ஊராட்சி செயலாளர்கள் அறிவிப்பு
11-Mar-2025
பஞ்., செயலாளர்கள் ஆர்ப்பாட்டம்கிருஷ்ணகிரி:கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகம் எதிரில், தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கத்தினர் சார்பில் தற்செயல் விடுப்பு மற்றும் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் செந்தில்குமார் தலைமை வகித்தார். செயலாளர் ராதாகிருஷ்ணன், பொருளாளர் நமச்சிவாயம் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில், நிர்வாகிகள் பேசியதாவது:முறையான காலமுறை ஊதியம் பெற்றுவரும் பஞ்., செயலர்களை தமிழக அரசின் ஓய்வூதியத் திட்டத்தில் இணைத்து, ஊராட்சி ஒன்றியங்களில் பணியாற்றும் பதிவறை எழுத்தர்களுக்கு உண்டான அரசின் சலுகைகளை ஊராட்சி செயலருக்கும் விரிவுபடுத்தி அரசாணை வெளியிட வேண்டும். இக்கோரிக்கையை வலியுறுத்தி, தற்செயல் விடுப்புடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். வரும் ஏப்., 4ல் சென்னையில் ஊரக வளர்ச்சித்துறை ஆணையரகத்தில் பெருந்திரள் முறையீடும், 21ல், காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட உள்ளோம். எனவே, பஞ்., செயலாளர்களை ஓய்வூதிய திட்டத்தில் இணைத்து, பதிவுறு எழுத்தருக்கு பொருந்தக்கூடிய அரசின் சலுகைகளை விரிவுப்படுத்தி அரசாணை வழங்க வேண்டும்.இவ்வாறு, அவர்கள் பேசினர்.கோரிக்கையை வலியுறுத்தி, 100க்கும் மேற்பட்ட பஞ்., செயலாளர்கள் முழக்கங்களை எழுப்பினர். நேற்று மாவட்டத்தில், 287 பஞ்., செயலாளர்கள் தற்செயல் விடுப்பு எடுத்ததால், பணிகள் பாதிக்கப்பட்டன.
11-Mar-2025