உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / அ.தி.மு.க., ஒன்றிய செயலாளர் கைது

அ.தி.மு.க., ஒன்றிய செயலாளர் கைது

அ.தி.மு.க., ஒன்றிய செயலாளர் கைதுஓசூர்:கர்நாடகா மாநிலம், அத்திப்பள்ளி அருகே யாதவனஹள்ளி மாருதி நகர் லே அவுட்டை சேர்ந்தவர் சிவப்பா ரெட்டி,42; தொழிற்சாலை நடத்தி வருகிறார். இவர், ஓசூர் பூனப்பள்ளி அருகே பழைய ஆனைக்கல் சாலையில், 30 சென்ட் நிலத்தை வாங்கினார். இந்த நிலம் தங்களுக்கு தான் சொந்தம் என மற்றொரு தரப்பினர் கூறி வருகின்றனர். அது தொடர்பாக சப்கலெக்டரிடமும் மனு கொடுத்து விசாரணையில் உள்ளது. இந்நிலையில் சிவப்பாரெட்டி தான் வாங்கிய பிரச்னைக்குரிய நிலத்தில், நிறுவனம் கட்டும் பணியில் ஈடுபட்டுள்ளார். கடந்த, 27 மதியம், 3:00 மணிக்கு, சிவப்பாரெட்டி நிலத்திற்குள் அத்துமீறி நுழைந்த ஒரு தரப்பினர், அங்கிருந்த பொருட்களை சேதப்படுத்தி விட்டு, சிவப்பா ரெட்டிக்கு மிரட்டல் விடுத்தனர்.இது தொடர்பாக அவர் கொடுத்த புகார்படி, பொம்மாண்டப்பள்ளியை சேர்ந்த ஹரிஷ்ரெட்டி, 45, முனிரெட்டி, 60, வெங்கடசாமிரெட்டி, 65, ராஜகோபால்ரெட்டி, 62, மற்றும் கொத்தகொண்டப்பள்ளி பஞ்., முன்னாள் துணைத்தலைவர் ஹரிஷ்ரெட்டி, 42, மற்றும் பாலமுருகன், 26, பூனப்பள்ளியை சேர்ந்த அ.தி.மு.க., ஓசூர் தெற்கு ஒன்றிய செயலாளர் ஹரிஷ்ரெட்டி, 46, மற்றும் கர்னுாரை சேர்ந்த வினோத்குமார், 22, ஆகிய, 8 பேரை மத்திகிரி போலீசார் நேற்று கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ