உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / போதையில் ரகளைஇருவர் அதிரடி கைது

போதையில் ரகளைஇருவர் அதிரடி கைது

போதையில் ரகளைஇருவர் அதிரடி கைதுபோச்சம்பள்ளி:கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த, கீழ்மயிலம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் சரவணன், 48, அடிக்கடி குடித்து விட்டு போதையில் போச்சம்பள்ளியில் தர்மபுரி-திருப்பத்தூர் சாலையில், நடுவில் படுத்துக்கொண்டு போக்குவரத்துக்கு இடையூறு செய்வது, அதேபோல் பொதுமக்களை தகாத வார்த்தையில் திட்டுவது என தொடர்ந்து ரகளை செய்து வந்தார்.அதேபோல் பழனிஆண்டவர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் பாண்டியன், 50, போதையில் அடிக்கடி அப்பகுதியில் உள்ள பொதுமக்களிடம் ரகளையில் ஈடுபட்டு வந்தார். சரவணன், பாண்டியன் இருவரையும் போச்சம்பள்ளி போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை