நரிக்குறவர் மக்களிடம் வாக்களிக்க விழிப்புணர்வு
சூளகிரி:கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனஹள்ளி சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட, பேரிகை பஞ்., கரியசந்திரம் கிராமத்தில், நரிக்குறவர் இன மக்களிடம், 100 சதவீத ஓட்டுப்பதிவு குறித்து, நேற்று விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.இதன் ஒரு பகுதியாக, நரிக்குறவர் மக்கள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணியும், பாரம்பரிய கலைநிகழ்ச்சியும் நடந்தன. 100 சதவீதம் வாக்களிப்பது குறித்து, பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டன. சூளகிரி பி.டி.ஓ.,க்கள் கலா, விஜயா, தனி தாசில்தார் சின்னசாமி, துணை பி.டி.ஓ., வினோத் உட்பட பலர் பங்கேற்றனர்.