உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / போட்டித்தேர்வுக்கு பயிற்சியளிக்க தகுதியானோர் விண்ணப்பிக்கலாம்

போட்டித்தேர்வுக்கு பயிற்சியளிக்க தகுதியானோர் விண்ணப்பிக்கலாம்

கிருஷ்ணகிரி:மத்திய, மாநில அரசுகள் நடத்தும் போட்டி தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகளை கையாள திறமையுள்ள பயிற்றுனர்கள் விண்ணப்பிக்கலாம் என, மாவட்ட கலெக்டர் தினேஷ்குமார் தெரிவித்துள்ளார்.இது குறித்து, அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:கிருஷ்ணகிரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய தன்னார்வ பயிலும் வட்டத்தின் வாயிலாக டி.என்.பி.எஸ்.சி., குரூப் 1, குரூப் 2, உள்ளிட்ட தேர்வுகள் எஸ்.ஐ., தேர்வு உள்ளிட்ட மத்திய, மாநில அரசுகளால் நடத்தப்படும் பல்வேறு தேர்வுகளுக்கு பயிற்சி வகுப்புகள் அளிக்கப்படுகிறது.புதிய பயிற்றுனர்களை தேர்வு செய்யும் வகையில், நேர்காணலும் நடத்தப்பட்ட வருகிறது. இதில் கலந்து கொள்ள வரும் பயிற்றுனர்கள், எந்த பாடப்பிரிவினை தேர்வு செய்துள்ளார்களோ அந்த பாடப்பிரிவினை கையாளுவதில் குறைந்தபட்சம், 2 ஆண்டுகள் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.போட்டித்தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகளை கையாளும் அனுபவமும், திறமையும் மிக்க கிருஷ்ணகிரி மாவட்டத்தை சார்ந்த பயிற்றுனர்கள் வரும், 18க்குள், கிருஷ்ணகிரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்திற்கு நேரிலோ அல்லது 04343 291983 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை