எம்.சாண்ட் கடத்திய 2 லாரிகள் பறிமுதல்
எம்.சாண்ட் கடத்திய 2 லாரிகள் பறிமுதல்ஓசூர்:ஓசூர், தாசில்தார் சின்னசாமி மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள், பொம்மாண்டப்பள்ளி சர்க்கிள் பகுதியில் வாகன சோதனை செய்தபோது, அவ்வழியாக வந்த டிப்பர் லாரியை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது, தேன்கனிக்கோட்டையில் இருந்து, கர்நாடகா மாநிலம், அத்திப்பள்ளிக்கு, 4 யூனிட் எம்.சாண்டை கடத்தி செல்வது தெரிந்தது. லாரியை பறிமுதல் செய்த அதிகாரிகள், மத்திகிரி போலீசில் ஒப்டைத்தனர். போலீசார், லாரி டிரைவர், உரிமையாளரை தேடி வருகின்றனர்.கெலமங்கலம் கூட்ரோடு பகுதியில் வாகன சோதனை மேற்கொண்ட பிதிரெட்டி வி.ஏ.ஓ., முருகன் மற்றும் வருவாய்த்துறையினர், 2 யூனிட் எம்.சாண்ட் கடத்தி சென்ற டிப்பர் லாரியை பறிமுதல் செய்து, கெலமங்கலம் போலீசில் ஒப்படைத்தனர். லாரி டிரைவர், உரிமையாளரை போலீசார் தேடி வருகின்றனர்.