உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / பெண்ணிடம் நகை பறிக்கமுயன்றவருக்கு 7 ஆண்டு

பெண்ணிடம் நகை பறிக்கமுயன்றவருக்கு 7 ஆண்டு

பெண்ணிடம் நகை பறிக்கமுயன்றவருக்கு '7 ஆண்டு'கிருஷ்ணகிரி:பர்கூர் அருகே, பெண்ணிடம் நகை பறிக்க முயன்றவருக்கு, 7 ஆண்டு சிறை தண்டனை விதித்து, கிருஷ்ணகிரி முதன்மை சார்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் அடுத்த மட்டாரப்பள்ளியை சேர்ந்தவர் சுதா, 35. இவர் கடந்த, 2022 பிப்., 7ல் தன் ஸ்கூட்டி மொபட்டில் கொண்டப்பநாயனப்பள்ளி அருகே சென்றார். அப்போது அவ்வழியாக மற்றொரு ஸ்கூட்டி மொபட்டில் வந்த நபர், சுதா அணிந்திருந்த, 2 பவுன் சங்கிலியை பறித்து தப்ப முயன்றார். அவரை, அருகிலிருந்தவர்கள் மடக்கி பிடித்து, பர்கூர் போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில், அவர் திருப்பத்தூர் மாவட்டம், நாட்றம்பள்ளி அடுத்த காவேரிப்பட்டை சேர்ந்த தர்மலிங்கம், 45 என தெரிந்தது. அவரை, பர்கூர் போலீசார் கைது செய்தனர்.இவ்வழக்கு, கிருஷ்ணகிரி முதன்மை சார்பு நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில், நேற்று தீர்ப்பளிக்கப்பட்டது. நீதிபதி மோகன்ராஜ், குற்றம்சாட்டப்பட்ட தர்மலிங்கத்திற்கு, 7 ஆண்டுகள் சிறை மற்றும், 1,000 ரூபாய் அபராதம் விதித்தார். அபராதத்தை கட்ட தவறினால், மேலும் மூன்று மாத சிறை தண்டனை அனுபவிக்க உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை