அ.தி.மு.க.,பூத் கமிட்டி கூட்டம்
அ.தி.மு.க.,பூத் கமிட்டி கூட்டம்ஓசூர்:ஓசூர் மேற்கு பகுதிக்கு உட்பட்ட அரசனட்டி பகுதியில், அ.தி.மு.க., பூத் கமிட்டி உறுப்பினர்கள் நியமன கூட்டம், பகுதி செயலாளர் மஞ்சுநாத் தலைமையில் நடந்தது. பூத் வாரியாக அந்தந்த பகுதிகளுக்கே சென்று, ஜெயலலிதா பேரவை மாநில துணை செயலாளர் பன்னீர்செல்வம் மற்றும் கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட செயலாளர் பாலகிருஷ்ணாரெட்டி ஆகியோர் உறுப்பினர்களுக்கு ஆலோசனை வழங்கினர். ஜெயலலிதா பேரவை மாவட்ட செயலாளர் சிட்டி ஜெகதீசன், ஓட்டுனர் அணி மாவட்ட செயலாளர் சென்னகிருஷ்ணன், எம்.ஜி.ஆர்., மன்ற மாநில துணை செயலாளர் பொய்யாமொழி, கெலமங்கலம் ஒன்றிய செயலாளர் ஜெயபால், முன்னாள் கவுன்சிலர் ரமேஷ் உட்பட பலர் பங்கேற்றனர்.