மேலும் செய்திகள்
காமராஜர் பிறந்த நாள்: நலத்திட்ட உதவி வழங்கல்
16-Jul-2026
ஓசூர்:தமிழக மறைந்த முன்னாள் முதல்வர் காமராஜரின் அரியவகை புகைப்படங்களை சேகரித்து, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் மூலம், வண்ண படங்களாக மாற்றி தயாரிக்கப்பட்ட காமராஜர் ஆல்பம் என்ற, 200 பக்கங்கள் கொண்ட புத்தகம் வெளியீட்டு விழா, ஓசூரில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நடந்தது. ஐ.என்.டி.யு.சி., தேசிய செயலாளரும், ஓசூர் காங்., முன்னாள் எம்.எல்.ஏ.,வுமான மனோகரன் தலைமை வகித்தார்.காங்., தேசிய செயலாளர் மோகன்குமாரமங்கலம், புத்தகத்தை வெளியிட்டு பேசினார். தர்மபுரி மாவட்ட காமராஜர் அறக்கட்டளை தலைவர் அருணாசலம், கிருஷ்ணகிரி காங்., மேற்கு மாவட்ட தலைவர் ஹரிஷ்பாபு, நிர்வாகி மைஜா அக்பர், முன்னாள் தலைவர் முரளிதரன், மாநகர தலைவர் தியாகராஜன், மாநில செயலாளர் வீரமுனிராஜ், மாவட்ட செயலாளர் கீர்த்திகணேஷ் உட்பட பலர் பங்கேற்றனர்.
16-Jul-2026