மாவிளக்கு ஊர்வலம்
தேன்கனிக்கோட்டை, தேன்கனிக்கோட்டை அருகே லக்கசந்திரம் கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோவில் திருவிழா நடந்தது. மேள, தாளங்கள் முழங்க பெண்கள் மாவிளக்கு எடுத்து கொண்டு, கோவிலுக்கு ஊர்வலமாக சென்றனர். அம்மனுக்கு படையல் வைத்து வழிபட்டனர். அருள் வந்து ஆடிய பெண் பக்தர்கள் அருள்வாக்கு கூறினர். அம்மனுக்கு ஆடு, கோழி பலியிட்டு பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். லக்கசந்திரம் சுற்று வட்டார கிராம பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை, கோவில் விழா கமிட்டியினர் மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனர்.