10 அடி நீள மலைப்பாம்பு மீட்பு
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் அடுத்த கந்திகுப்பம் பஞ்.,க்கு உட்பட்ட கொக்கானுாரில் உள்ள விவசாய நிலத்தில் நேற்று மதியம் ஒரு மலைப்பாம்பு புகுந்தது. இது குறித்து அப்பகுதி மக்கள் அளித்த தகவல்படி வனத்துறையினர் அங்கு சென்று, மரத்தடியில் இருந்த, 10 அடி நீள மலைப்பாம்பை பிடித்து, பர்கூர் காப்புக்காட்டில் விடுவித்தனர்.