உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / 100 சதவீதம் ஓட்டளிக்க உறுதிமொழி

100 சதவீதம் ஓட்டளிக்க உறுதிமொழி

கிருஷ்ணகிரி :வரும் சட்டசபை தேர்தலில், 100 சதவீதம் ஓட்டளிப்பதை வலியுறுத்தி, கிருஷ்ணகிரி அரசு ஆடவர் கலைக்கல்லுாரியில், மாணவ, மாணவியரின் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடந்தது. பொருளியல் துறை தலைவர் சிவானந்தம் வரவேற்றார். கல்லுாரி முதல்வர் அனுராதா தலைமை வகித்தார். தேர்தல் விழிப்புணர்வு பொறுப்பு அலுவலர் மகேஸ்வரி, போகனப்பள்ளி வி.ஏ.ஓ., அண்ணாமலை ஆகியோர், தேர்தலில் ஓட்டளிப்பதன் அவசியம் குறித்து எடுத்துரைத்தனர். தொடர்ந்து, 100 சதவீதம் ஓட்டளிப்பை வலியுறுத்தி மாணவ, மாணவியர் உள்பட அனைவரும் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர். மாணவ, மாணவியரின் விழிப்புணர்வு நாடகம் நடத்தப்பட்டு, துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டன. உதவி பேராசிரியர் மாரியப்பன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை