மேலும் செய்திகள்
கல்லுாரி மாணவி உட்பட 3 பெண்கள் மாயம்
07-Mar-2025
2 பெண்கள் உட்படநான்கு பேர் மாயம்கிருஷ்ணகிரி:கிருஷ்ணகிரி அடுத்த கல்நாய்க்கன்பள்ளத்தை சேர்ந்தவர் சுதா, 33, கூலித்தொழிலாளி. கடந்த, 24ல், வீட்டிலிருந்து வெளியில் சென்றவர் மாயமானார். அவரது கணவர் நேற்று முன்தினம் மகாராஜகடை போலீசில் அளித்த புகார் படி, போலீசார் விசாரிக்கின்றனர்.மத்துார் அடுத்த மந்திப்பட்டியை சேர்ந்தவர் மைதிலி, 31. கடந்த, 20ல், வீட்டிலிருந்து வெளியில் சென்றவர் மாயமானார். இதுகுறித்து அப்பெண்ணின் கணவர் புகார் படி, மத்துார் போலீசார் விசாரிக்கின்றனர். ஓசூரை சேர்ந்தவர், 18 வயதான மாற்றுத்திறனாளி சிறுமி. கடந்த, 24 மாலை, 5:00 மணிக்கு தன் தாயுடன் பெங்களூரு செல்ல ஓசூர் பஸ் ஸ்டாண்ட் வந்த சிறுமி மாயமானார். அவரது தாய் புகார் படி, ஓசூர் டவுன் போலீசார் விசாரித்து வருகின்றனர்.ஓசூர் தின்னுாரை சேர்ந்தவர், 18 வயது சிறுமி. அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படிக்கிறார். நேற்று முன்தினம் காலை வீட்டிலிருந்து வெளியே சென்ற மாணவி மாயமானார். அவரது தந்தை ஓசூர் டவுன் போலீசில் கொடுத்த புகாரில், ஓசூர் பாரதிதாசன் நகரை சேர்ந்த சித்திக், 23, மீது சந்தேகம் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். போலீசார் விசாரித்து வருகின்றனர்.
07-Mar-2025