உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / டிரான்ஸ்பார்மர்களை உடைத்து காப்பர் திருடிய 5 பேர் கைது

டிரான்ஸ்பார்மர்களை உடைத்து காப்பர் திருடிய 5 பேர் கைது

கிருஷ்ணகிரி:டிரான்ஸ்பார்மர்களை உடைத்து, காப்பர், ஆயில் திருடிய ஐவரை போலீசார் கைது செய்தனர். கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை, ஓசூர், தளி மற்றும் சுற்றுப்புற பகுதி டிரான்ஸ்பார்மர்களில் இரவு நேரங்களில் மின் தடை ஏற்படுத்தி, அவற்றை உடைத்து, காப்பர் கம்பிகள் மற்றும் ஆயிலை மர்ம நபர்கள் திருடி வந்தனர். இதுவரை, 100க்கும் மேற்பட்ட டிரான்ஸ்பார்மர்களில் திருட்டு சம்பவங்கள் அரங்கேறின. இதனால், மின்வாரியத்திற்கு பல லட்சம் ரூபாய் இழப்பு ஏற்பட்டது. இந்நிலையில், தேன்கனிக்கோட்டை - அய்யூர் சாலை மற்றும் அடைக்கலபுரம் ஆகிய பகுதிகளில், இரு டிரான்ஸ்பார்மர்களை உடைத்து, 14ம் தேதி காப்பர் கம்பிகள், ஆயிலை மர்ம நபர்கள் திருடினர். போலீசார் விசாரித்ததில், தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அடுத்த சம்மனஹள்ளி கிராமத்தைச் சேர்ந்த பழனி, 28, அவரது தம்பி சேகர், 26, பஞ்சப்பள்ளியை சேர்ந்த விஜி, 20, தேன்கனிக்கோட்டை அருகே பேலாளத்தைச் சேர்ந்த கிரீஸ், 26, ஆகிய நான்கு பேர், டிரான்ஸ்பார்மரை உடைத்து திருட்டில் ஈடு பட்டது தெரிந்தது. போலீசார் நேற்று அவர்களை கைது செய்தனர். காப்பர் கம்பிகளை விலைக்கு வாங்கிய, தர்மபுரி மாவட்டம், மாரண்டஹள்ளி அருகே அஞ்சான் மயில் கிராமத்தைச் சேர்ந்த திருப்பதி, 42, என்பவரையும் கைது செய்தனர். 100 கிலோ காப்பர் கம்பிகள் மற்றும் இரு பைக்குகள் பறிமுதல் செய்யப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ