உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / குட்டையில் கும்மாளமிட்ட யானை

குட்டையில் கும்மாளமிட்ட யானை

தேன்கனிக்கோட்டை; கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் வனக்கோட்டம், அஞ்செட்டி வனச்சரகத்தில், ஏராளமான நிரந்தர யானைகள் முகாமிட்டுள்ளன. கோடை வெயிலால் உடல் சூட்டை தணிக்க, யானைகள் குட்டை தேடி செல்கின்றன. குட்டை நீரை பருகி தாகத்தை தீர்த்து கொள்கின்றன. அஞ்செட்டி வனப்பகுதியில் சாலையோரமாக உள்ள குட்டையில், நேற்று முன்தினம், ஒற்றை யானை வெயிலின் சூட்டை தணிக்க, நீண்ட நேரம் அதில் கும்மாளமிட்டது. அதன் பின், குட்டை கரை வழியாக மேலே ஏரி வந்து, அப்பகுதியில் உள்ள சாலையை கடந்து சென்றது. இதை அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள் தங்களது மொபைல்-போனில், ஆபத்தை உணராமல் புகைப்படம் எடுத்தனர். இதனால் வனத்துறையினர் எச்ச-ரிக்கை விடுத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை