உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு பேரணி

போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு பேரணி

ஊத்தங்கரை, டிச. 24-ஊத்தங்கரை, அதியமான் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லுாரி மற்றும் போதை பொருள் ஒழிப்பு குழுவின் சார்பாக, 'போதை இல்லா சமுதாயத்தை உருவாக்குவோம்' என்ற தலைப்பில் விழிப்புணர்வு பேரணி நேற்று நடந்தது. எஸ்.எஸ்.ஐ., சாந்தசீலன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.ஊத்தங்கரை ரவுண்டானாவில் துவங்கிய பேரணி, பி.டி.ஓ., அலுவலகம் வரை, போதை பொருள் ஒழிப்பு கோஷமிட்டு ஊர்வலமாக சென்றனர். இதில், அதியமான் கல்வி நிறுவங்களின் நிறுவனர் திருமால்முருகன், கல்லுாரி செயலர் ஷோபா மற்றும் பேராசிரியர்கள், நாட்டு நலப்பணித் திட்ட மாணவியர், இளைஞர் செஞ்சிலுவை சங்க மாணவியர் என, 250 பேர், 'போதை பொருளை ஒழிப்போம், போதையில்லா சமுதாயத்தை உருவாக்குவோம், பெண் குழந்தைகளை பாதுகாப்போம், பெண் குழந்தைகளுக்கு கல்வியை கொடுப்போம்' என்ற விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை