அசோக் லேலண்ட் தொழிலாளர்கள் போராட்டம்
ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், குமுதேப்பள்ளியில், அசோக் லேலண்ட் யூனிட் - 2 நிறுவனத்தில், 'டி.வி.எஸ்., வெகிக்கிள் மொபிலிட்டி சொல்யூஷன்' என்ற தனியார் நிறுவனம் வாயிலாக, 160 ஒப்பந்த தொழிலாளர்கள் பணியாற்றுகின்றனர். ஊதிய உயர்வு, பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை, ஒப்பந்த தொழிலாளர்கள் முன்வைத்தனர். ஒப்பந்த நிறுவனம் கண்டுகொள்ளவில்லை. இதனால், தொழிலாளர்கள், 160 பேரும் நேற்று காலை பணியை புறக்கணித்து, அசோக் லேலண்ட் நிறுவனம் முன், போராட்டத்தில் ஈடுபட்டனர்.