பர்கூர் சரக விளையாட்டு போட்டி மல்லப்பாடி அரசு பள்ளி சாதனை
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் சரக அளவிலான கைபந்து போட்டியில், மல்லப்பாடி அரசு மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த, மூத்தோர் மற்றும் இளையோர் பிரிவு மாணவர்கள் முதல் இடத்தையும், மூத்தோர் பிரிவு மாணவர்கள், 2ம் இடத்தையும் பிடித்தனர். இதேபோல், இறகு பந்து போட்டியில் மூத்தோர் பிரிவில், 2ம் இடத்தையும் பெற்று, சாதனை படைத்து, பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளனர். வெற்றி பெற்ற மாணவர்களையும், பயிற்சி அளித்த உடற்கல்வி ஆசிரியர்கள் முடியரசன், பரந்தாமன் ஆகியோரை, தலைமை ஆசிரியர் பொன்னப்பன் மற்றும் ஆசிரி-யர்கள், பள்ளி மேலாண்மை குழுவினர் பாராட்டினர். முதலிடம் பிடித்தவர்கள், மாவட்ட அளவிலான விளையாட்டுக்கு தகுதி பெற்றுள்ளனர்.