உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / நுாலகங்களுக்கு பிரித்து அனுப்பாத புத்தகங்கள்

நுாலகங்களுக்கு பிரித்து அனுப்பாத புத்தகங்கள்

கிருஷ்ணகிரி:கோவை காந்திபுரத்திலுள்ள பெரியார் அறிவுலகம் நுாலகத்தில் 'அகல் விளக்கு' மற்றும் 'பீனிக்ஸ்' பதிப்பகத்தின் பெயர்களில் போலியான நுால்கள், அதிக விலைக்கு கொள்முதல் செய்து வைக்கப்பட்டு உள்ளதாக புகார்கள் எழுந்தன. இதையடுத்து, முறைகேடு புகாருக்கு உள்ளான மேற்கண்ட பதிப்பகங்களின் புத்தகங்கள், பெரியார் அறிவுலக நுாலகம் மற்றும் மதுரை கலைஞர் நுாற்றாண்டு நுாலகம் உள்ளிட்ட சில நுாலகங்களில் இருந்து அலுவலர்களால் அகற்றப்பட்டன. இந்த புத்தக கொள்முதல் முறைகேடுகள் குறித்து, அரசு விசாரணை நடத்தி வருகிறது. இந்நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள, 103 நுாலகங்களுக்கு வழங்க, கிருஷ்ணகிரியில் உள்ள மைய நுாலகத்திற்கு 'அகல் விளக்கு' பதிப்பகத்தில் இருந்து, 797 புத்தகங்கள், 'பீனிக்ஸ்' பதிப்பகத்தில் இருந்து, 323 புத்தகங்கள் என மொத்தம் 1,120 புத்தகங்கள் வரப்பெற்று உள்ளன. புத்தகங்கள் தொடர்பாக சர்ச்சையால், அலுவலர்கள் அவற்றை பிரித்து அனுப்பாமல் உள்ளனர். அரசின் உத்தரவு படி அடுத்த கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என, நுாலகத்துறை அலுவலர்கள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ