உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / லாரி மோதி கிளீனர் சாவு

லாரி மோதி கிளீனர் சாவு

கிருஷ்ணகிரி: விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியை சேர்ந்தவர் கிருபா-கரன், 27, லாரி கிளீனர். கடந்த, 25ல், போச்சம்பள்ளி சிப்காட்டில் உள்ள ஒரு நிறுவனத்திற்கு லோடு ஏற்ற வந்தனர். அப்போது லாரியை நிறுத்தி விட்டு டிரைவர் துாங்கி உள்ளார். கிளீனரான கிருபாகரன் லாரிக்கு அடியில் படுத்து துாங்கி உள்ளார். சிறிது நேரம் கழித்து டிரைவரான பரந்தாமன், 52, கிருபாகரன் படுத்து இருப்பதை கவனிக்காமல் லாரியை இயக்கி உள்ளார். இதில் கிரு-பாகரன் படுகாயமடைந்தார். அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு, கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சேர்த்த நிலையில் நேற்று உயிரிழந்தார். போச்சம்பள்ளி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ